கனடாவின் வான்கூவர் பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களுக்கு எதிராக போராட்டகாரர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டம் வாட்டர்ஃப்ரண்ட் ஸ்டேஷனில் ஆரம்பமாகி கிரான்வில் தீவை நோக்கி போராட்டக்காரர்கள் நகர்ந்ததுடன், செயற்கை நுண்ணறிவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறும், பதாதைகள் ஏந்தியவாறும் பேரணியாக சென்றனர்.
இதன்படி குறித்த பகுதியில் கடுமையான நீர் கட்டுப்பாடுகளை மக்கள் எதிர்க் கொண்டு வருகின்ற நிலையில் இங்கு நீர் மற்றும் ஆற்றலின் அளவு தொடர்பில் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்போராட்டத்தை ஏட்பாடு செய்திருந்த டோரின் லாரோக் கூறுகையில்,
செயற்கை நுண்ணறிவு தரவு மைய திட்டங்களை நகர மற்றும் மத்திய அரசுகள் நிறுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் மீது கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
