ஜப்பானியர்கள் புதுப்புது விடயங்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவர்கள்.
அந்த வகையில் பல் மருத்துவ உலகில் மாபெரும் புரட்சியாக, விழுந்த பற்களை மீண்டும் இயற்கையாகவே முளைக்கச் செய்யும் TRG-035 எனும் புதிய மருந்தின் உலகின் முதலாவது மனித மருத்துவப் பரிசோதனையை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் உத்தியோகபூர்வமாக தொடங்கியுள்ளனர்.
இந்த பரிசோதனை வெற்றிகரமாக முடியும்பட்சத்தில் எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்த மருந்து உலக சந்தைக்கு விற்பனைக்கு வரும் என பல் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
