Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பிரதேச சபையின் நடவடிக்கையில் தலையீடு செய்யும் பலாலி போலீசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

மே 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வலி. வடக்கு பிரதேச சபையின் நடவடிக்கையில் தலையீடு செய்யும் பலாலி போலீசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .

வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது.
அதன் போது, பிரதேச சபைக்கு சபைக்கு சொந்தமான வீதியினை தையிட்டி விகாராதிபதி அடாத்தாக கையகப்படுத்தி வைத்துள்ள நிலையில் , அதனை விடுவிக்க முயற்சித்த பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளருக்கு எதிராக பலாலி பொலிஸார் மல்லாகம் பொலிஸ் நிலையத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூட சம்பந்தமே இல்லாதது நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார்.
இவ்வாறான விடயங்கள் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பிரதேச சபைக்கு பொலிஸார் விடுக்கும் அச்சுறுத்தலாகவே இதனை நாம் கருத வேண்டும்.
தையிட்டி விகாரை சட்டவிரோதமானது. என அறிவித்தல் பலகையை நாட்டுவதற்கு பிரதேச சபையில் நாம் தீர்மானம் எடுத்திருந்த போதிலும் , அதற்கும் பலாலி பொலிஸார் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு தடையேற்படுத்தி இருந்தனர்.
தற்போது வீதியினை விடுவிக்கும் முயற்சிக்கும் தடையேற்படுத்தி நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்துள்ளனர். சட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸார் சட்டத்தை நடைமுறைப்படுத்த விடாது தடையேற்படுத்திக வருவதுடன் , நீதிமன்றில் வழக்குகளும் தொடர்ந்து வருகின்றனர்.
இவ்வாறான பலாலி பொலிசாரின் நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்த நிலையில் ,  சபையில் ஏக மனதாக தீர்மானம் எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேவேளை , தீர்மானங்களை மாத்திரம் எடுத்து விட்டு காலம் கடத்தாது உடனடியாக சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்து , நீதிமன்றில் பொலிஸாருக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து விரைவான நடவடிக்கையை தவிசாளர் எடுக்க வேண்டும் எனவும் , இவ்வாறான விடயங்களுக்கு தமிழ் சட்டத்தரணிகள் பேதங்கள் இன்றி ஓரணியில் திரண்டு ஆதரவு தர வேண்டும் எனவும் சபையில் உறுப்பினர்கள் கோரி இருந்தனர்.
முந்தைய செய்தி இயற்கையாக பல் முளைக்க புதிய மருந்து
அடுத்த செய்தி விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இணைப்பு: 59 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வரலாறு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

மே 14, 2026
இலங்கைமுதன்மை செய்தி

கடந்த ஆண்டில் பதிவான பாலியல் முறைப்பாடுகள்

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழ். சிறைச்சாலை நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அன்னதானம்

பிப்ரவரி 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் வாய்க்கால்களைத் தூர்வாரும் விசேட செயற்றிட்டம் முன்னெடுப்பு

ஏப்ரல் 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?