டெஸ்லா ஸ்மார்ட்போன் இணையம் மற்றும் சார்ஜ் இல்லாமல் செயல்படும் என்று கூறப்படுகிறது. ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோளுடன் இணைந்து செயல்படும் இந்த போன், சூரிய சக்தி மூலம் சார்ஜ் ஆகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
டெஸ்லா ஸ்மார்ட்போன் பற்றி எலான் மஸ்க் அல்லது டெஸ்லா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. டெஸ்லா நிறுவனம் 2021 ஆம் ஆண்டு முதல் ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் தொழிலில் இறங்குவதாக ஒரு வதந்தி உள்ளது. ஆனால் இதுவரை டெஸ்லாவிடமிருந்து ஸ்மார்ட் போன்கள் வரவில்லை. முன்னதாக, ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கும் தொழில் எதுவும் தன்னிடம் இல்லை என்று மஸ்க் அறிவித்திருந்தார். ஆனால், டெஸ்லா பிஐ மூன்று அசாதாரண அம்சங்களுடன் வரவுள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.