Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

Bill C-22 சட்டமூலம் தோற்கடிக்கப்படுமானால், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கப் பேரபாயம் ஏற்படும் என எச்சரிக்கை

மே 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள சர்ச்சைக்குரிய ‘சட்டமூலம் C-22’ (Bill C-22) எனப்படும் புதிய தரவு அணுகல் மற்றும் கண்காணிப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படுமானால், நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச உளவுத்துறை கூட்டணிகளுக்குப் பேரபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய உளவு அமைப்பான ‘சிசிஸ்’ (CSIS) மற்றும் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளே இந்த கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

பொதுமக்களின் டிஜிட்டல் தரவுகளைப் பொலிஸாரும் உளவுத்துறையினரும் எளிதாகப் பெறுவதற்கு வழிவகுக்கும் இந்தச் சட்டத்திற்கு எதிராக, சர்வதேசத் தொழில்நுட்ப நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் அமெரிக்க நாடாளுமன்றக் குழுக்கள் எனப் பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்த தீவிர எதிர்ப்பலைகளுக்கு மத்தியில், தங்களின் புதிய சட்டத்தைப் பாதுகாப்பதற்காகக் கனேடிய உளவுத்துறை மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தற்போது தீவிர கூட்டு ஊடகப் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

கைத்தொலைபேசிகளின் அண்மைக்கால அசுர வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் தங்களின் புலனாய்வு நடவடிக்கைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை விளக்குவதற்காக, கனேடிய உளவு அமைப்பு சில ரகசிய உளவு விபரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

கனேடிய உளவு அமைப்பின் கொள்கை மற்றும் மூலோபாயக் கூட்டாண்மைக்கான துணை இயக்குநர் நிக்கோல் ஜைல்ஸ் (Nicole Giles) இந்த விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, அப்பிள் மற்றும் மெட்டா (Meta) நிறுவனங்கள் இச்சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளன.

இந்த சட்டமானது, கனேடிய வாடிக்கையாளர்களின் Encryption குறியாக்க பாதுகாப்பு அம்சங்களை முற்றாக அழித்துவிடும் என்றும் அப்பிள் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி மசூதி படுகொலைகளின் முக்கிய குற்றவாளியின் தரவுகளைத் தங்களுக்கு வழங்குமாறு FBI உளவு அமைப்பு கோரிக்கை
அடுத்த செய்தி கனடிய ஆயுதப் படைகளுக்கு முதல் பெண் தலைமை தளபதி: ஜெனரல் ஜென்னி காரிக்னான் வரலாற்றுச் சாதனை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றம் தீவிரம்

செப்டம்பர் 13, 2026
கனடாமுதன்மை செய்தி

எதிர்காலத்தில் டொனால்ட் டிரம்ப்புக்கு கனடா நன்றி தெரிவிக்கும் என்று கியூபெக்கின் முன்னாள் முதல்வர் அறிவிப்பு!

செப்டம்பர் 4, 2025
கியூபெக்முதன்மை செய்தி

Mont-Royal borough பகுதியில் ஒரு வாரத்துக்குள் பதிவான இரண்டாவது மரணம்.

ஜூலை 14, 2024
கனடா

ஒன்டாரியோவில் தங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள்

ஜனவரி 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?