Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மத்திய அரசு தங்களை உளவு பார்க்கின்றது – பால் செயின்ட் பியர் பரபரப்பு குற்றச்சாட்டு

மே 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தை கனடாவிலிருந்து பிரித்து தனி நாடாக்க முயலும் ‘பார்ட்டி கியூபெகோவா’ (Parti Québécois – PQ) கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமோண்டன், மத்திய அரசு தங்களை உளவு பார்ப்பதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிளாமோண்டன், கனடிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (CSIS) போன்ற மத்திய அரசு நிறுவனங்கள், கியூபெக் சுதந்திர இயக்கத்தின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கூறினார்.

ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அமைதியான முறையில் அரசியல் செய்பவர்களை அரசு உளவு பார்ப்பது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனக் குறிப்பிட்ட பிளாமோண்டன், இதற்கான சில வரலாற்றுச் சான்றுகளைச் சுட்டிக்காட்டினார். 1970-களில் றோயல் கனடிய மவுண்டட் போலீஸ் (RCMP) அமைப்பானது, கியூபெக் பிரிவினைவாதக் கட்சியினருக்கு எதிராகச் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதை, முந்தைய விசாரணை ஆணைக்குழுக்கள் உறுதி செய்துள்ளன.

தனது கட்சியின் உறுப்பினர்களையோ அல்லது ஆதரவாளர்களையோ மத்திய உளவு அமைப்புகள் தற்போது கண்காணிக்கவில்லை என்பதற்கான முறையான “உத்தரவாதத்தை”, மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கனடாவுக்குள் வெளிநாட்டுத் தலையீடுகள் பற்றிப் பேசும் மத்திய அரசு, முதலில் தன் நாட்டு அரசியல்வாதிகளையே உளவு பார்ப்பதை நிறுத்த வேண்டும் என, ‘பார்ட்டி கியூபெகோவா’ (Parti Québécois – PQ) கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமோண்டன் வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி பில் ‘101’ சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 27,000 மாணவர்கள்
அடுத்த செய்தி மேற்குவங்க முதலமைச்சராகப் பதவியேற்ற சுவேந்து அதிகாரியின் அதிரடி உத்தரவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் விபத்து – சிறுமி உயிரிழப்பு

நவம்பர் 21, 2025
கியூபெக்

கியூபெக்கில் ‘டிஜிட்டல் சுகாதாரப் பதிவு’ திட்டம்!

மே 13, 2026
1
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசோடு கைகோர்க்கும் வியட்நாம்….

ஏப்ரல் 7, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் நிறைவேற்றப்பட்டுள்ள Bill 9 மசோதா

ஏப்ரல் 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?