Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

மேற்குவங்க முதலமைச்சராகப் பதவியேற்ற சுவேந்து அதிகாரியின் அதிரடி உத்தரவு

மே 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மேற்கு வங்க மாநிலத்தில் புதிய ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, இந்திய- வங்கதேச எல்லைப் பகுதியில் முள்வேலி அமைப்பதற்கான நிலங்களை 45 நாட்களுக்குள் எல்லை பாதுகாப்புப் படையிடம் (BSF) ஒப்படைப்பதற்கு, அந்த மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வராக கடந்த 9 ஆம் திகதி அன்று பதவியேற்ற சுவேந்து அதிகாரி, நேற்றைய தினம் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார்.

பங்களாதேஷ் நாட்டுடனான எல்லைப் பகுதியில் வேலி அமைக்கப்படாமல் உள்ள இடங்களுக்கான நிலங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் BSF அமைப்பிடம் வழங்குவதற்கு, இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்கான நிலமாற்றப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு, இன்னும் 45 நாட்களுக்குள் முழுமையாக முடிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் எல்லை வேலி அமைக்கும் பணி தடைபட்டிருந்தது.

சட்டவிரோத ஊடுருவல் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுத்து, தேசப் பாதுகாப்பை உறுதி செய்வதே தமது அரசின் முதல் கடமை என்று, மேற்கு வங்கத்தின் முதல்வர் சுவேந்து அதிகாரி செய்தியாளர்களிடம்
தெரிவித்தார்.

அமைச்சரவைக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைச் செயற்படுத்துவதற்காக, மேற்குவங்கத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் நில வருவாய்த்துறைச் செயலர்களுக்குக் கடுமையான காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு மட்டுமின்றி, மேற்குவங்க மாநிலத்தின் முந்தைய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு மத்திய அரசு திட்டங்களையும் உடனடியாக அமல்படுத்த, அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முந்தைய செய்தி மத்திய அரசு தங்களை உளவு பார்க்கின்றது – பால் செயின்ட் பியர் பரபரப்பு குற்றச்சாட்டு
அடுத்த செய்தி மன்னாரில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை- விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

இந்தியா – இஸ்ரேல் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிப்ரவரி 26, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

அஹமதாபாத் விமான விபத்து – பலர் பலி

ஜூன் 12, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

ஏப்ரல் 17, 2026
இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்(Video)

ஆகஸ்ட் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?