Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

சிறுவர் ஆபாசப் படங்களை தயாரித்த குற்றத்தில் கைதான வழக்கறிஞர் பெனாய்ட் போர்கன்

மே 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சிறுவர் ஆபாசப் படங்களை தயாரித்தது மற்றும் அவற்றை வைத்திருந்தது உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் மொன்றியலைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கறிஞர் பெனாய்ட் போர்கன் (Benoit Bourgon) மொன்றியலில் சிவில் மற்றும் வணிக ரீதியிலான வழக்குகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.

கியூபெக் மாகாண காவல்துறையின் (Sûreté du Québec) சிறுவர் உரிமைமீறல் தடுப்புப் பிரிவினர் நடத்திய தீவிர விசாரணையைத் தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டார்.

மொன்றியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் மீது நான்கு முக்கியப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, இந்தச் சட்டவிரோதச் செயல்கள் 2013 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான நீண்ட காலப்பகுதியில் நடைபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானவுடன், அவர் பணியாற்றி வந்த சட்ட நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து அவரது விபரங்கள் நீக்கப்பட்டுள்ளன.

போர்கனின் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் லேப்டாப் மற்றும் கைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, தற்போது அவர் கடுமையான நிபந்தனைகளுடன் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இணையத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய செய்தி ஷெர்புரூக் தொகுதியை தம் வசமாக்கும் நடவடிக்கையில் தீவிர காட்டும் லிபரல் கட்சி
அடுத்த செய்தி ஸ்டடிஸ்டிக்ஸ் கனடா புள்ளிவிபரவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

ஆங்கிலக் கல்விக்கு புதிய தடைகள் – கியூபெக்கில் மாற்றம் தீவிரம்!

ஏப்ரல் 16, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் பொருளாதார அறிக்கையில் நிவாரணம் உள்ளடக்கப்படும் சாத்தியம்

நவம்பர் 25, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கை ஒரு பொருளாதார சக்தியாக மாற்றுவதற்கு தயார் – கிறிஸ்டின் ஃப்ரெச்செட்,

ஜனவரி 26, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வேலைவாய்ப்பை இழந்த 57,000 பேர்

மார்ச் 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?