Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்

மே 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மேற்காசியவில் நீடித்து வரும் போர் பதற்றத்தைத் தணிப்பதற்காக அமெரிக்காவின் ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட சமாதான யோசனைகளை ஈரான் நிராகரித்துள்ளது. ஈரானின் இந்தப் பதில் தமக்கு அதிருப்தி அளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தராகச் செயற்படும் பாகிஸ்தான் ஊடாக ஈரான் தனது உத்தியோகபூர்வ பதிலை வொஷிங்டனிடம் கையளித்துள்ளது.

ஈரானின் ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

போர் நிறுத்தத்திற்கு ஈரான் அனைத்து முனைகளிலும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும்,  அமெரிக்காவின் கடற்படைத் தடைகள் விலக்கப்பட வேண்டும், எதிர்காலத்தில் ஈரான் மீது எவ்விதத் தாக்குதல்களும் நடத்தப்படாது என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் ஆகிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது:

ஈரானின் இந்த நிபந்தனைகளைக் கடுமையாகச் சாடியுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், “ஈரானின் பிரதிநிதிகள் எனப்படுவோரின் பதிலை நான் வாசித்தேன். அது எனக்குப் பிடிக்கவில்லை. அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் மற்றும் லெபனான் மீதான தாக்குதல்களால் மேற்காசியாப் போர்க்களமாக மாறியுள்ள நிலையில், அமெரிக்கா முன்னெடுத்த இந்தச் சமாதான முயற்சி தோல்வியடைந்துள்ளமை சர்வதேச சமூகத்தினிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்புக்கும் இடையிலான இந்த முரண்பட்ட நிலைப்பாடுகளால் பிராந்தியத்தில் போர் மேலும் தீவிரமடையக்கூடும் என அஞ்சப்படுகிறது.

முந்தைய செய்தி தமிழக கட்சி தலைவர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் விஜய்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

ஈரானியப் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததை அமெரிக்கா உறுதிப்படுத்தியது

மார்ச் 4, 2026
உலகம்

கடமையிலிருந்த மருத்துவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற காவல்துறை அதிகாரிகள் பணியிடைநீக்கம்!

செப்டம்பர் 21, 2025
உலகம்முதன்மை செய்தி

Emirates விமான சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம் – பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

மார்ச் 4, 2026
உலகம்

சீனாவில் நில அதிர்வு

செப்டம்பர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?