நாட்டில் மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மின்னல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தோன்றும் வேளைகளில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
