Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

போதைப்பொருள் பாவனையை ஒழிக்குமாறு கோரி மாணிக்கபுரத்தில் போராட்டம்..

ஏப்ரல் 6, 2025
முல்லைத்தீவு
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தி தமது இளம் சந்ததியினரை காப்பாற்றுமாறு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் உள்ள பெண்கள் ஒன்றிணைந்து மாணிக்கபுரம் கிராம அலுவலர் அலுவலகம் முன்பாக தமது கிராமத்தில் போதை பொருள் பாவணையால் பல்வேறு சமூக சீரழிவுகள் இடம் பெற்று வருவதாகவும், அதனை உடனடியாக உரியவர்கள் கட்டுப்படுத்தி எமது இளம் சந்ததியினர் மற்றும் கிராம மக்களை பாதுகாக்குமாறு கோரி குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மதுவை ஒழிப்போம் மக்களை காப்போம், உழைத்து வாழப்பழகு ஊரை அழித்து வாழாதே , போதைப்பொருளை ஒழிப்போம் விசமிகளை அழிப்போம், போதையால் ஊரை அழிக்கிராயே உன் சந்ததி மட்டும் நிலைத்து வாழுமா, போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறும் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரிடம் கையளிக்கவுள்ளதாக தொரிவித்தனர்.

அத்தோடு போராட்டத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபடுவதாக அடையாளப்படுத்தப்பட்ட மூன்று வீடுகளுக்கு சென்ற மக்கள், அவர்களது வீட்டு வாசல்களில் பதாதைகளையும் காட்சிப்படுத்திவிட்டு சென்றிருந்தனர்.

முந்தைய செய்தி குளவிசுட்டானில் தமிழ் அரசின் தேர்தல்பரப்புரைக் கூட்டம் – ரவிகரன் எம்.பி பங்கேற்பு
அடுத்த செய்தி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எமக்கு ஆதரவு தாருங்கள் – பா.உ.கருணநாதன் இளங்குமரன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

கனடா மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று – டொனால்ட் ட்ரம்ப்

மார்ச் 20, 2025
இலங்கை

சிறப்பாக இடம்பெற்ற வவுனியா மாவட்ட சமாதான பேரவையின் பொங்கல் விழா.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் பொலிஸாரால் கைது

ஜூலை 25, 2025
இலங்கைமுதன்மை செய்தி

பிடியாணையை மீளப் பெற உத்தரவு.

பிப்ரவரி 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?