வவுனியா வடக்கு உள்ளூர்அதிகார சபையின் 04ஆம் வட்டாரத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் “நாடு யாருடனும் இருக்கட்டும் நம்மூர் நம்மோடு இருக்கட்டும்” என்னும் தொனிப்பொருளிலான தேர்தல் பரப்புரைக்கூட்டம் குளவிசுட்டான் பகுதியில் இடம்பெற்றது.
குறித்த தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் பங்கேற்றார்.
அந்தவகையில் வவுனியா வடக்கு உள்ளூர் அதிகாரசபையின் 04ஆம் வட்டாரத்தில் குளவிசுட்டான் மற்றும், மாறாவிலுப்பை கிராமங்கள் உள்ளடங்குகின்றன.
இந் நிலையில் குறித்த 04ஆம் வட்டாரத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின்சார்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் முருகுப்பிள்ளை குகதாசன் அவர்களின் தலைமையில் இத்தேர்தல் பரப்புரைக்கூட்டம் இடம்பெற்றது.
பெரும்பான்மை இனத்தவர்களின் ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் தமிழர்களின் பூர்வீக பகுதியான வவுனியா வடக்கு உள்ளூர் அதிகார சபையை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கைப்பற்றவேண்டியதன் அவசியம் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும் இப் பரப்புரைக்கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.