Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி அகழ்வுகள் ஜூன் முதலாம் திகதி வரை நிறுத்தம்

மே 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமையுடன் நிறுத்தப்பட்டு , மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமான நிலையில், இன்றைய தினம் சனிக்கிழமை வரையில் 12 நாட்கள் அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இன்றைய தினத்துடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , எதிர்வரும் முதலாம் திகதி மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது, ஒரு மனித என்பு கூட்டு தொகுதி புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகளில் 05 என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம் செம்மணி புதைகுழிக்குள் இருந்து இதுவரையிலான கால பகுதியில் 261 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை புதைகுழிக்குள் அடையாளம் காணப்பட்ட என்பு தொகுதி ஒன்றின் மண்டையோடு பகுதி மாத்திரம் வெளி தெரிந்த நிலையில் , அது அகழ்ந்து எடுக்கப்படாத நிலையில், அதற்கு இலக்கம் இடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 12 நாட்களாக நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் போது, 21 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு , அவை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் , புதைகுழிக்குள் இருந்து மூக்குத்தி , நாணய குற்றிகள் , ஆணிகள் , மஞ்சள் நிற வளையல் துண்டு உள்ளடங்கலாக 17 பிற பொருட்கள் மீட்கப்பட்டு அவை நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 1ஆம் திகதி மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள பகுதிகளில் காணப்படும் புற்தரைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

முந்தைய செய்தி அட்டமஸ்தானாதிபதி பல்லேகல ஹேமரத்ன தேரருக்கு விளக்கமறியல்
அடுத்த செய்தி மின்னல் தாக்கம் தொடர்பில் வெளியான எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

ஜூன் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கம்பளையில் கோர விபத்து-3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி!

அக்டோபர் 6, 2025
இலங்கை

கடுகண்ணாவ பகுதியில் ரயிலில் மோதி ஒருவர்உயிரிழப்பு!

அக்டோபர் 6, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

ஜூலை 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?