தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இடம்பெற்ற நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இத்தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முன்னிலையில் வந்துள்ளார்.
இதன்படி தமிழக வெற்றி கழகம் 105 இடங்களை தக்க வைத்துள்ளதுடன், அதிமுக கூட்டணி 77 இடங்களை தக்கவைத்துள்ளதுடன், திமுக 56 இடங்களை தக்க வைத்துள்ளதுடன், நாம் தமிழர் கட்சிக்கு எந்த இடத்திலும் மூலநிலை வகிக்கவில்லை என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த தேர்தலில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
குறுகிய காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி பல இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் வந்துள்ளதுடன், பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தவர்கள் பாரிய தோல்வியை சந்தித்துள்ளமை தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.


