நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை , காலி, மாத்தறை, ஹம்பாந்த்தோட்டை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிரித்துள்ளது.
கடந்த மாதத்தில் மாத்திரம் 4617 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மேல் மாகாணங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இவ்வாண்டில் 12 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், அண்மையில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு நோயாளி உயிரிழந்துள்ளதாக டெங்கு நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
