Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனிதப்புதைகுழி – 2 எலும்புக்கூடுகள் அடையாளம்

மே 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஆறாம் நாளான இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் மூன்று என்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட இரண்டு மனித என்பு கூட்டு தொகுதியுடன் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 246 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 243 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்திற்கு இடமான கறுப்பு நிற மண் அரித்து எடுக்கப்பட்ட நிலையில் , தற்போது அவை உலர விடப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதைகுழிக்குள் மரத்திலான பெட்டி போன்ற உருவம் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பணிகள் முடிவடைந்த பின்னரே , அது தொடர்பில் உறுதியாக கூற முடியும் எனவும் , நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அகழ்வு பணிகள் நடைபெறாது எனவும் , 7ஆம் நாள் அகழ்வு பணிகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை மேற்கொள்ளப்படும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அடுத்த செய்தி பல துப்பாக்கிகளுடன், கனடா,நயாகராவில் ஒருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் ஆஸ்துமா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

மே 4, 2025
இலங்கை

வெலிமடை மண்சரிவு – இரு உடல்கள் மீட்பு!

நவம்பர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாகாண சபை தேர்தல் தொடர்பான ரில்வின் வெளியிட்ட கருத்து – தேர்தலை முடக்கும் சதி

மே 25, 2026
1
இலங்கை

மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை தூய்மைப்படுத்திய மட்டு அழகு கலை அமைப்பு.

மார்ச் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?