முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரச நிதியைத் தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் வழக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (29) விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதிக்கு முன்னதாக சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விசாரணைகளின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றங்களை அடுத்த தவணையின்போது சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
