Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் வாய்க்கால்களைத் தூர்வாரும் விசேட செயற்றிட்டம் முன்னெடுப்பு

ஏப்ரல் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பல தசாப்தங்களாகத் தூர்வாரப்படாமல் காணப்பட்டமையால், மழைக்காலங்களில் மக்கள் மிகப் பெரிய வெள்ளப் பேரிடர்களைச் சந்திப்பதற்குக் காரணமாக அமைந்த வாய்க்கால்களைத் தூர்வாரும் விசேட செயற்றிட்டம் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக, கிளிநொச்சி மாவட்டத்தின் கனகாம்பிகைக் குளத்திலிருந்து கிளிநொச்சிக்குளம் வரையிலான 1.5 கிலோமீற்றர் நீளமான பிரதான வாய்க்காலைத் தூர்வாரும் பணிகளை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் ஆகியோர் இன்று (21.04.2026) செவ்வாய்க்கிழமை இரத்தினபுரம் பகுதிக்குச் சென்று நேரில் பார்வையிட்டனர்.

வடக்கு மாகாண சபையின் மீண்டெழும் நிதியிலிருந்து 5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த நிதி ஒதுக்கீட்டுக்கு அமைவாக, மேற்படி வாய்க்கால் அண்ணளவாக 10 மீற்றர் அகலப்படுத்தப்பட்டுத் தூர்வாரப்பட்டு வருகின்றது.

இப்பணிகளைப் பார்வையிட்ட கௌரவ ஆளுநர் அவர்கள், வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் நீர்ப்பாசனப் பொறியியலாளரிடம் கேட்டறிந்துக் கொண்டார்.

இதன்போது, வாய்க்காலுக்குச் சொந்தமான ஒதுக்கப் பிரதேசத்தினுள் காணிகளை ஆக்கிரமித்துள்ள சிலரால் இப்பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து, பொலிஸாரின் உதவியுடன் குறித்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, பணிகளை எவ்விதத் தடையுமின்றித் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

முந்தைய செய்தி பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் முதலிடம்
அடுத்த செய்தி மன்னாரில் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட குழந்தையின் சடலம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

ஆகஸ்ட் 18, 2026
இலங்கை

35ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் தெல்லிப்பழை அணி சம்பியன்

செப்டம்பர் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பேசுவதற்கு இடமளித்தால் உண்மை வெளிவரும் என, இலங்கை அரசாங்கம் அச்சமடைகிறது – சாணக்கியன்

டிசம்பர் 1, 2025
இலங்கை

“ஆட்சி மாறினாலும் அச்சுறுத்தல்கள் மாறவில்லை” யாழில் அதிகரிக்கும் பொலிசாரின் கெடுபிடிகள்!

நவம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?