இந்தியாவின் விருதுநகர் பகுதிக்கு அருகில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து தொடர்பில் தெரிய வருகையில், பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட உராய்வின் போது இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்க் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
