Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

தனது இறுதி உரையை நிகழ்த்தி விடைபெற்றார் முதலமைச்சர் பிரான்சுவா லெகோ

ஏப்ரல் 4, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் முதலமைச்சராக கடந்த எட்டு ஆண்டுகளாகப் பணியாற்றிய பிரான்சுவா லெகோ (François Legault), நேற்று சட்டமன்றத்தில் தனது உணர்ச்சிகரமான இறுதி உரையை நிகழ்த்தி விடைபெற்றார்.

தனது 28 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்த இந்த நிகழ்வில், கியூபெக் மக்கள் தங்களது தனித்துவமான அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என, அவர் உருக்கமான கோரிக்கையை விடுத்தார். தனது உரையில், கியூபெக்கின் பிரெஞ்சு மொழி மற்றும் மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்காகத் தனது அரசு எடுத்த நடவடிக்கைகளை லெகோ நியாயப்படுத்தினார்.

அவர் உரை நிகழ்த்துவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாக, Bill 9 எனும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. கியூபெக் எப்போதும் கியூபெக்காகவே இருக்க வேண்டும் என்பதில் நாம்
உறுதியாக இருக்க வேண்டும் என பிரான்சுவா லெகோ இதன்போது குறிப்பிட்டார்.

ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து,எயார் ட்ரான்ஸாட் (Air Transat) எனும் விமான நிறுவனத்தைத் தொடங்கி, பின்னர் முதலமைச்சராக உயர்ந்த தனது பயணத்தை அவர் கண்ணீருடன் நினைவுகூர்ந்தார்.

உயர்கல்வி கற்காத தனது பெற்றோரே தனக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்தனர் என்றும், தான் முதலமைச்சரானதைப் பார்க்கத் தனது தந்தை உயிரோடு இல்லையே என்பது தனது வாழ்வின் பெரும் குறை என்றும் அவர் தெரிவித்தார்.

2011-ஆம் ஆண்டில் தான் தொடங்கிய CAQ கட்சி, 2018 மற்றும் 2022 தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றதை அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார். கியூபெக் முதல்வரை வழக்கமாகக் கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட, நேற்று அவருடைய நீண்டகால பொதுச் சேவையைப் பாராட்டி கௌரவித்தனர்.

சபை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கியூபெக் முதல்வர் பிரான்சுவா லெகோவுக்கு மரியாதை செலுத்தினர். அரசியல் என்பது கடினமானது; 28 ஆண்டுகள் மக்கள் சேவையில் இருப்பது சாதாரணமானதல்ல என எதிர்க்கட்சித் தலைவர்கள் அவருக்கு புகழாரம் சூட்டினர்.

எதிர்வரும் 12 ஆம் திகதி அன்று நடைபெறவுள்ள CAQ கட்சி மாநாட்டில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவரிடம் லெகோ தனது முதலமைச்சர் பதவியை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கவுள்ளார். கிறிஸ்டின் பிரெச்செட் அல்லது பெர்னார்ட் டிரைன்வில் ஆகிய இருவரில் ஒருவர் கியூபெக்கின் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி மொன்றியலில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

டடஸ்க்வேயக் கிரீ நேஷன் மக்கள் வீடுகளுக்குத் திரும்புவது ஒத்திவைப்பு

ஜூன் 19, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வேலையிழந்து நிர்க்கதியில் நிற்கும் மெக்சிகோ தொழிலாளர்கள்

பிப்ரவரி 2, 2026
கியூபெக்

கியூபெக் மாகாணத்தில், பாதுகாப்பற்ற பதற்றமான சூழலில் சிக்கியுள்ளது கனேசடேக் பழங்குடி சமூகம்!

ஆகஸ்ட் 28, 2025
கியூபெக்

கிரிப்டோகரன்சி நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த ஹைட்ரோ-கியூபெக் அதிரடித் திட்டம்

பிப்ரவரி 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?