தற்போது வெப்பமான காலநிலை நிலவுகின்ற நிலையில் ஹட்டன் பகுதியிலுள்ள காடுகளுக்கு சில விஷமிகளால் தீ வைக்கப்பட்டு வருகின்றது . இதன்படி இன்றையதினம் ஹட்டன் வன அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காட்டு பகுதிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்தால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கினிகத்தேன பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
