Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இளவாலை வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தமை தொடர்பில் விசாரணை

மார்ச் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இளவாலை பிரதேச வைத்தியசாலையில், வைத்தியர் கடமையில் இல்லாமை தொடர்பாக வெளியான செய்தி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ், இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியிடம் விளக்கம் கோரியுள்ளார்.

இளவாலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவன் நேற்றைய தினம் வியாழக்கிழமை திடீர் சுகவீனம் காரணமாக மயங்கி விழுந்த நிலையில், சிகிச்சைக்காக இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு வைத்தியர்கள் கடமையில் இல்லை என கூறி , மாணவனை சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாதியர்கள் முதலுதவி அளித்ததுடன் , தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்பி வையுங்கள் என கோரிய போதிலும், தாம் சிகிச்சை அளித்தால் , தாமே பொறுப்பேற்க வேண்டும் என கூறியும் , வைத்தியசாலையில் நோயாளர் வண்டி இல்லாததால் தனியார் வாகனம் எதிலாவது அழைத்து சென்று தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கூறியுள்ளனர்.

அதனை அடுத்து மாணவனை முச்சக்கர வண்டியில் சுமார் 10 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெளியான செய்திகளின் அடிப்படையில் , விசாரணைகளை ஆரம்பித்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயம், இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியிடம் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் சம்பவம் தொடர்பில் விளக்கம் தருமாறு கோரியுள்ளது.

முந்தைய செய்தி முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்றாவது பிரதேச செயலாளர் மாநாடு
அடுத்த செய்தி எரிபொருள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட தீர்மானம் – யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பருத்தித்துறையில் போதை ஒழிப்பு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்றிட்டம்

நவம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம் ….

ஏப்ரல் 14, 2025
அண்மைய செய்திகள்கனடா

AI முதல் பாதுகாப்பு வரை – இந்தியா நோக்கி பிரதமர் மார்க் கர்னியின் முக்கிய பயணம்.

பிப்ரவரி 23, 2026
இலங்கை

மன்னாரில் சிலோன் டெவலப்மென்ட் பிளான்டேஷன் (CDP) எம்பயர் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு

ஏப்ரல் 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?