Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்றாவது பிரதேச செயலாளர் மாநாடு

மார்ச் 27, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தின் மூலம் மக்களிற்கு வினைத்திறனுடைய சேவையை வழங்குவதனை இலக்காக் கொண்டு 2026 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச செயலாளர் மாநாடு நேற்றைய தினம் (26) காலை 8.30 மணிக்கு துணுக்காய் பிரதேச செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

துணுக்காய் பிரதேச செயலகத்திற்கு வருகைதந்த மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் பிரதேச செயலகத்தின் சுற்றுப்புறச் சூழல், அலுவலக முறைமை என்பவற்றை முதலில் பார்வையிட்டனர். தொடர்ந்து நடைபெற்ற பிரதேச செயலாளர் மாநாட்டில், கடந்த முறை நடைபெற்ற மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் முதலில் கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய உலகளாவிய எரிபொருள் நெருக்கடி தொடர்பாக மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை, செலவுக் கட்டுப்பாடுகள் தொர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகள், மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பிரதேச செயலகங்களினூடாக மேற்க்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள், பொதுமக்கள் சேவைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அண்மையில் மாவட்டத்தில் ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் அது தொடர்பான பாதிப்புக்கள் அதற்கான நிவாரணங்கள் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. விசேடமாக அரசாங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள கிராமிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம் உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் சமூக நலத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

தொடர்ந்து பிரதேச செயலகங்களின் நிர்வாக, நிதி, திட்டமிடல் செயற்பாடுகள், முன்னேற்றங்கள், சவால்கள், சமூக நலச்சேவை செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள், இந்த வருடத்தில் செயற்படுத்த வேண்டிய திட்டங்கள், 2026 வரவு செலவுத் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு என்பன தொடர்பிலும் அதன் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் இனங்காணப்பட்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இன்றைய இந்த மாநாட்டினை துணுக்காய் பிரதேச செயலாளர் இ.ரமேஸ் அவர்கள் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தார். இந்த மாநாட்டில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.எஸ்.மஞ்சுளாதேவி (நிர்வாகம்),மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட நலன்புரி நன்மைகள் சபையின் மாவட்ட இணைப்பாளர், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு முதலான பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், உதவிப்பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துக்கொண்டனர்.

முந்தைய செய்தி மாங்குளம் மற்றும் பனிக்கன்குளம் சிறுவர் கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு
அடுத்த செய்தி இளவாலை வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தமை தொடர்பில் விசாரணை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வெசாக் தினத்தில் 20 கைதிகளுக்கு பொது மன்னிப்பு…

மே 12, 2025
இலங்கை

யாழில் தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம் நாளை!

செப்டம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கைதான இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

நவம்பர் 10, 2025
இலங்கை

நாளை முதல் அதிவேக வீதிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு புதிய அறிவிப்பு!

ஜூலை 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?