Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மாங்குளம் மற்றும் பனிக்கன்குளம் சிறுவர் கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு

மார்ச் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தில் முழுமையான சிறுவர் மேம்பாடு மற்றும் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் சிறுவர் கழகங்களை வலுப்படுத்தும் சிறிய தலைவர்கள் (Little Leaders – Strengthening Children’s Clubs for Holistic Child Development and Community Participation in Mullaitivu District) திட்டத்தின் கீழ் மாங்குளம் மற்றும் பனிக்கன்குளம் சிறுவர் கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சிறுவர்கள் சமூக மாற்றத்தின் சக்திவாய்ந்த முகவர்களாக திகழ்கின்றனர். குழந்தைப் பருவத்தில் உருவாகும் மனப்பான்மைகள், மதிப்புகள் மற்றும் நடத்தைகள் நெறிமுறைகள், சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் குடிமைப் பங்கேற்பு போன்ற துறைகளில் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

எனவே, அவர்களை நெறிமுறை மதிப்புகள், சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை உட்பொதித்த “சிறிய தலைவர்கள்” ஆக உருவாக்கி, குடும்பங்கள், பாடசாலைகள் மற்றும் சமூகங்களில் நல்ல நடத்தைகளை இயல்பாக பரப்பும் சமூக மாற்றத் தூதர்களாக (Ambassadors of Social Change ) உருவாக்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல கிராம அலுவலர் பிரிவுகளில் சிறுவர் கழகங்கள் இயங்கி வந்தாலும், அவை நடத்தை மாற்றம், தலைமைத்துவ மேம்பாடு மற்றும் செயற்பாட்டு சமூகப் பங்கேற்புக்கான வலுவான தளங்களாக முழுமையாக பயன்படுத்தப்படாத நிலை காணப்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்களுடன் இணைந்து சிறுவர் கழகங்களின் செயற்பாடுகளை மேம்படுத்தி வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நேற்றைய தினம்(26) மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் , ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ.நிசாந்தன் மற்றும் ஒட்டுசுட்டான் உதவிப் பிரதேச செயலாளர் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், கிராம அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோருடன் மாங்குளம் மற்றும் பனிக்கன்குளம் சிறுவர் கழகங்களின் செயற்பாடுகளை பார்வையிட்டு, சிறுவர் கழகத்திற்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.

முந்தைய செய்தி தமிழர் வரலாற்று மையம் – பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பம்
அடுத்த செய்தி முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்றாவது பிரதேச செயலாளர் மாநாடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.போதனாவில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள்

மே 12, 2026
இலங்கை

யாழ் பருத்தித்துறை கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்ப்பு

டிசம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொது மக்களின் உதவியை நாடும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு!

ஆகஸ்ட் 21, 2025
இலங்கை

தையிட்டி விவாகரம் – மீண்டும் இனவாதம் தலைதூக்க அனுமதியோம்.

பிப்ரவரி 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?