ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பலாச்சோலை பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆண்களை 2 கிராம் 1300 மில்லிகிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
இதன்போது அங்கு தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 21, மற்றும் 25 வயதுடைய இரு வியாபாரிகளை கைது செய்ததுடன் ஒருவரிடம் ஒரு கிராம் 800 மில்லி கிராம், மற்றவரிடம் ஒரு கிராம் 500 மில்லிகிராம் ஜஸ் போதைப் பொருட்களை மீட்டனர்
இதில் கைது செய்யப்பட்ட கொக்குவில் சிவன் கோவில் வீதியைச் சேர்ந்த பிரதான வியாபாரி கடந்த மாதம் 29 ம் திகதியில் இருந்து தங்கு விடுதியில் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபா பணம் செலுத்தி தங்கி வந்துள்ள நிலையில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த வியாபார நண்பன் கடந்த 5ம் திகதி அந்த விடுதிக்கு சென்று பிரதான வியாபாரியுடன் தங்கியிருந்து போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளது பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
