Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கின் பில் 21 சட்டத்திற்கு எதிராக கருத்துரைத்துள்ள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை

மார்ச் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் சர்ச்சைக்குரிய Bill 21 மதச்சார்பற்ற சட்டத்திற்கு எதிராக, கனேடிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (CCCB) நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

பொதுத்துறை ஊழியர்கள் மதச் சின்னங்களை அணிவதைத் தடை செய்ய மாகாண அரசாங்கத்திற்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என கத்தோலிக்க ஆயர்கள் இன்று வாதிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னிலையில் கத்தோலிக்க ஆயர்கள் தரப்பு சட்டத்தரணி பிலிப் எச். ஹோர்கன் தமதுகருத்துகளை முன்வைத்தார்.

கனடாவின் அரசியலமைப்பு மதம் மற்றும் பன்முகத்தன்மைக்கு ஆதரவானது என்று சுட்டிக்காட்டிய அவர், மதம் சார்ந்த விடயங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கே உள்ளது எனவும் மாகாண அரசிற்கு அந்த அதிகாரங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

மதச் சின்னங்களை அணிவது ஒருவரது நம்பிக்கையை வெளிப்படுத்துவது ஆகும் என்று குறிப்பிட்ட கத்தோலிக்க ஆயர்கள் தரப்பு சட்டத்தரணி, அவற்றை கியூபெக் அரசு தடை செய்வதும் ஒரு குறிப்பிட்ட தெய்வீக மறுப்பு கொள்கையை மக்கள் மீது திணிப்பதாகும் எனத் தெரிவித்துள்ளார்.

கியூபெக் மாகாண அரசு, தனது சிறப்புநிலை அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தச் சட்டத்தை நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டதாக மாற்ற முற்பட்டாலும், அடிப்படை மனித உரிமைகளை மீற யாருக்கும் அதிகாரம் இல்லை என மனுதாரர்கள் வாதிட்டனர். நான்கு நாட்களாக நடைபெற்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்ற விசாரணைகள் இன்றுடன் நிறைவடைந்தன. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி ஈரானின் கடற்படை தலைவர் அலிரேசா டங்சிரி உயிரிழப்பு
அடுத்த செய்தி மோசடி கும்பலின் முக்கிய நபரான ஜிம்மி யலிமாகி கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கில் 7 பில்லியன் டொலர் செலவில் மருத்துவமனை அமைப்பு

பிப்ரவரி 20, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தின் பிரிவினைக்கான வாக்கெடுப்பு தினத்தில் நடந்த இரகசிய அறிவுறுத்தல்கள் வெளியீடு.!

அக்டோபர் 18, 2025
கியூபெக்முதன்மை செய்தி

SNC-Lavalin-இன் முன்னாள் கட்டுமானப் பிரிவுத் தலைவரருக்கு கூடுதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஏப்ரல் 8, 2026
கியூபெக்முதன்மை செய்தி

அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்த ஜெனிவீவ் கில்போல்ட்

ஜனவரி 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?