வணிக நிறுவனங்களுக்கான கியூபெக் மாகாணத்தின் புதிய பிரெஞ்சு மொழி விதிகள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தன.
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் முதலாம் திகதியிலிருந்து இந்த விதிகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டியவையாக உள்ளன.
பில் 96 – என்று அழைக்கப்படும் சட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் உள்ளன.
வெளிப்புற விளம்பரப் பலகைகள், தயாரிப்பு லேபிள்கள் மற்றும் வணிகச் செயல்பாடுகளுக்குள் பிரெஞ்சு மொழியைப் பயன்படுத்துவது தொடர்பான கடுமையான விதிகளை வணிக நிறுவனங்கள் தற்போது பின்பற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன.
