தட்டம்மை நோயின் பரவல் அதிகரித்து வரும் நிலை காணப்படும் அல்பேட்டா மாகாணத்தின் தற்காலிக தலைமை மருத்துவ அதிகாரியாக மருத்துவர் சுனில் சூக்ராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பதவியினை இதுவரை வகித்துவந்த மருத்துவர் மார்க் ஜோஃபே, இந்த வாரத்தின் ஆரம்பத்தில், பதவி விலகியிருந்தார்.
இந்த நிலையிலேயே, மருத்துவர் சுனில் சூக்ராமை, தற்காலிக தலைமை மருத்துவ அதிகாரியாக நியமிப்பதற்கு அல்பேட்டா மாகாண அரசு தீர்மானித்தது.
மருத்துவர் சுனில் சூக்ராம் இப்பதவியில் நியமிக்கப்படுவதற்கு முன்னர், ஷெர்வுட் பூங்காவில் உள்ள ஸ்ட்ராத்கோனா சமூக மருத்துவமனையின் மருத்துவ இயக்குனராகவும் மருத்துவ ஊழியர்களின் தலைவராகவும் பணியாற்றி வந்தவராவார்.
அவர் அல்பேட்டா பல்கலைக்கழகத்தின் அவசர மருத்துவத் துறையில் மருத்துவத்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.