Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

விதிமுறைகளை மீறிய இருவருக்கு விந்து தானம் செய்வதற்கு தடை விதித்தது கியூபெக் நீதிமன்றம்

மார்ச் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக, தந்தை மற்றும் மகன் என இரு நபர்கள், தங்களது விந்தைத் தானம் செய்வதற்கு, கியூபெக் உயர் நீதிமன்றம் அதிரடித் தடை விதித்துள்ளது. நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குத் தந்தையான இவர்கள், மருத்துவ விதிகளையும் ஒப்பந்தங்களையும் மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

பிலிப் நார்மண்ட் (Philippe Normand) மற்றும் அவரது மகன் டொமினிக் சீலோஸ் (Dominik Seelos) ஆகியோருக்கு எதிராக, கியூபெக் உயர் நீதிமன்ற நீதிபதி சைமன் சேம்பர்லேண்ட் இந்தத் தடையை விதித்துள்ளார். இவர்கள் மூலம் பிறந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் அளவை விடப் பலமடங்கு அதிகமாக உள்ளது.

லோரி (Laurie) என்ற பெயருடைய ஒரு தாய் தொடர்ந்த வழக்கின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியாகின. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளைத் தோற்றுவிக்கக்கூடிய
அளவை விட அதிகமாக விந்தைத் தானம் செய்ய மாட்டோம் என அவர்கள் அளித்த வாக்குறுதி தற்போது மீறப்பட்டுள்ளதாக லோரி குற்றம் சாட்டியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட தந்தை – பிலிப் நார்மண்ட் (Philippe Normand) சுமார் 450 குழந்தைகளுக்குத் தந்தையாக இருப்பதும், மகன் டொமினிக் சீலோஸ் (Dominik Seelos) 160-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாக இருப்பதும் தெரியவந்தது.

அதாவது, ஒரு சிறிய நகரத்தின் மக்கள்தொகைக்கு இணையான குழந்தைகளுக்கு இவர்களே தந்தையாக உள்ளனரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் அந்தக் குழந்தைகளுக்கு இடையே இரத்த உறவு முறையிலான திருமணங்கள் நடக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதாக கியூபெக் உயர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது கியூபெக் மாகாணத்தில் விந்து தானத்திற்கு என, முறையான சட்டப்பூர்வக் கட்டுப்பாடுகள் இல்லை என்பதால், இதைப் பயன்படுத்தி இவர்கள் பேஸ்புக் (Facebook) போன்ற சமூக வலைதளங்கள் மூலம் தங்களை தானம் செய்பவர்களாக முன்னிலைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்தத் தீர்ப்பு தற்காலிகமானது என்றாலும், வழக்கு முடியும் வரை இவர்கள் கியூபெக்கில் விந்து தானம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கின் சர்ச்சைக்குரிய மதச்சார்பின்மை சட்ட விசாரணை நேற்று ஆரம்பம்
அடுத்த செய்தி அமெரிக்கக் குடியுரிமையை அதிகாரப்பூர்வமாகத் துறந்த அமெரிக்கர்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொண்ட்ரியல் நோர்ட் பிராந்தியப் பொலிஸ் அதிகாரிகள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

ஜூன் 15, 2026
கியூபெக்

கியூபெக்கில் மின்சாரப் பேருந்துகளாக மாற்றும் திட்டத்தில் பின்னடைவு 

பிப்ரவரி 10, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியலில்14 பெண் மாணவர்களின் நினைவாக வழங்கப்படும் உதவித்தொகைத் திட்டம்!

டிசம்பர் 2, 2025
கியூபெக்

அரசு கண்காணிப்பு அமைப்பு (AMP) வெளியிட்டுள்ள அறிக்கை

ஜனவரி 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?