Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

அகதிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள கனேடிய மத்திய அரசு

மார்ச் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு சட்டமூலம் (Omnibus Bill), அகதிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக மொன்றியலைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், அது பாரிய நாடுகடத்தல் செயற்பாடுகளுக்கு (Mass Deportations) வழிவகுக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். புதிய சட்டத்தின்படி, ஒரு நபர் கனடாவுக்கு வந்து ஒரு ஆண்டைக் கடந்திருந்தால், அவர் அகதித் தஞ்சம் கோருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போர் மற்றும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அனுபவங்களை வெளியே சொல்லப் பல ஆண்டுகள் எடுக்கும் நிலை காணப்படுகின்றது. அதேபோல, ஒரு நாட்டில் திடீரெனப் போர் வெடித்தால், ஏற்கனவே கனடாவிலுள்ள அந்த நாட்டைச் சேர்ந்த மாணவர்களோ அல்லது தொழிலாளர்களோ மீண்டும் சொந்த நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்படும்.

இவ்வாறான சூழல்களில், இந்த ”ஓராண்டு விதிமுறை” அவர்களைப் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளும் என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இச்சட்டத்தின் ஊடாக, குடிவரவு அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்கள் மூலம், எந்தவொரு குழுவினரின் நிரந்தர வதிவிட (PR) விண்ணப்பங்களையும் அல்லது அனுமதிப் பத்திரங்களையும் எவ்வித விசாரணையுமின்றி ரத்து செய்ய முடியும்.

அகதிகள் மற்றும் ஆவணமற்ற தொழிலாளர்களின் அந்தரங்கத் தகவல்களைப் பல்வேறு அரசுத் துறைகளுடன் பகிர்ந்துகொள்ளவும் இந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது. பணியிடங்களில் உரிமையாளர்களால் சுரண்டப்படும் தொழிலாளர்கள், அது குறித்துப் புகார் அளித்தால், உரிமையாளர்கள் அவர்களைக் குடிவரவுத் துறையிடம் காட்டிக்கொடுத்து நாடுகடத்தச் செய்யும் அபாயம் இதில் உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி ரயில் போக்குவரத்து இடைநிறுத்தம்!
அடுத்த செய்தி நயினாதீவை தாக்கிய மினி சூறாவளி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஏர் கனடா நிறுவனம் மீதான வழக்கை விசாரிக்கும் கனடா உச்ச நீதிமன்றம்

பிப்ரவரி 6, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் 9 கிளைகளை மூடிய ஸ்டார்பக்ஸ் நிறுவனம்

செப்டம்பர் 30, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடிய தேசிய கொடிகள் அதிகளவு விற்பனை!

பிப்ரவரி 13, 2025
கனடா

2019ல் காணாமல் போன Corey Baldwin வழக்கில் புதிய திருப்பம்!

பிப்ரவரி 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?