ஜனாதிபதி மாளிகையில் நேற்றையதினம் (18) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், இராஜதந்திரிகள், இஸ்லாமிய மதத் தலைவர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
இஸ்லாம் மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதுடன், பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி வரவேற்புரையை நிகழ்த்தினார்.
இப்தார் நிகழ்வில் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் உரையாற்றியதுடன் , வருகை தந்தோரிடம் சுமுகமான ஒரு கலந்துரையாடலை ஜானாதி மேற்க் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
