Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான பெண்ணுக்கு சரீர பிணை

மார்ச் 16, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மன்னாரில் 360 பவுன் தங்க நகைகள் தொடர்பாக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பெண்ணை சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி.

மன்னாரில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவரை இன்றைய தினம் திங்கட்கிழமை (16) மதியம் போலீசார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த பெண்ணை தலா 20 மில்லியன் பெறுமதியான இரு சரித பிணையில் செல்ல மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை அப்புறப்படுத்துவதற்கு உதவியதாக கூறி, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு ஒரு சந்தேக நபரைக் கைது செய்துள்ளது.

தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர், அதிலிருந்து பெறப்பட்ட வருமானத்தைக் கொண்டு ஒரு மாடிக் குடியிருப்பு, ஐந்து அறைகளைக் கொண்ட வீடு, ஒரு கார் மற்றும் சுமார் 360 பவுண்கள் எடையுள்ள தங்க நகைகள் வாங்கியுள்ளதாக கிடைத்த புகாரின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டு, பின்னர் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட பின்னர், சட்டவிரோத நிதியை பயன்படுத்தி வாங்கியதாகக் கருதப்படும் இரண்டு வீடுகள் மற்றும் கார் தொடர்பாக மன்னார் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சொத்துக்களை முடக்குவதற்கான நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டது.மேலும் அந்த உத்தரவுகளை தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்க நீட்டிப்புகள் கோரப்பட்டுள்ளன.

சந்தேக நபரின் மாமியாரான குறித்த பெண் பல நிதி நிறுவனங்களில் தங்க நகைகளை அடகு வைத்து, பின்னர் மன்னார் பகுதியிலுள்ள பல நகைக் கடைகளுக்கு அவற்றை விற்றுள்ளார் என்பது மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட தங்க நகைகளை, அவற்றின் தோற்றத்தை அறிந்திருந்தே அடகு வைத்து விற்றதன் மூலம் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக, குறித்த பெண் நேற்றைய தினம் (15) மன்னாரில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான மன்னாரைச் சேர்ந்த 66 வயதுடைய குறித்த பெண் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப் பட்ட நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த பெண்ணை தலா 20 மில்லியன் பெறுமதியான இரு சரீர பிணையில் செல்ல உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி விசாரணைகளுக்காக திகதியிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கிராமம் சமூக உற்பத்தித்திறனுக்கான மாதிரிக் கிராமங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு
அடுத்த செய்தி ஹட்டனில் சீராக நடைபெற்ற எரிபொருள் விநியோகம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

63 பொருட்களுக்கான விசேட வரி நீடிப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை

ஜனவரி 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். கரையோரங்களை சுத்தப்படுத்திய இராணுவம்

ஜூலை 29, 2025
இலங்கை

பொலிஸ் அதிகாரி ஒருவர் ஜஸ் போதைப் பொருளுடன் கைது!

அக்டோபர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?