தேசத்ததை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம் சமூக உற்பத்தித்திறனுக்கான மாதிரிக் கிராமங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் நாடுபூராகவும் நடைபெற்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் மலையாளபுரம் கிராம அலுவலகத்தில் நடைபெற்றது.
கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் கலந்து கொண்டார். குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் பி.ராஜ்வினோத், தேசிய உற்பத்தி திறன் செயலக உத்தியோகத்தர்கள் ,கிராமசேவையாளர்,பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
