இன்று கியூபெக் மாகாணத்தின் பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்தைத் தாக்கவுள்ள மிக மோசமான பனிமழை (Freezing Rain) காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 முதல் 30 மில்லிமீட்டர் வரை பனிப்பொழிவு இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மொண்ட்ரியல் கல்வி சேவை மையம் (CSSDM), ஆங்கில மொண்ட்ரியல் பள்ளிச்சபை (EMSB), லெஸ்டர் பி. பியர்சன் மற்றும் சர் வில்ஃபிரிட் லாரியர் உள்ளிட்ட அனைத்து முக்கிய பள்ளிச்சபைகளும் விடுமுறையை அறிவித்துள்ளன.
இது தவிர, மெக்கில் (McGill), கன்கார்டியா (Concordia) பல்கலைக்கழகங்கள் மற்றும் பல CEGEP கல்லூரிகளும் தங்களது நேரடி வகுப்புகளை ரத்து செய்துள்ளன.
சுற்றுச்சூழல் அமைச்சகம் விடுத்துள்ள எச்சரிக்கையின்படி, இந்தப் பனிமழை சுமார் 24 மணிநேரம் வரை நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
