கனடிய கடலோரக் காவல் படை கப்டன் ஒருவரைப் பணிநீக்கம் செய்த நடவடிக்கை செல்லுபடியானதென, கனடிய மத்திய தொழிலாளர் சபை தீர்ப்பளித்துள்ளது.
அந்த கடலோரக் காவல் படை கப்டன் கடலில் உயிருக்குப் போராடியவர்களின் அவசர அழைப்பை உள்நோக்கத்துடன் உதாசீனப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கப்டன் லூ கல்லகன் (Lou Callaghan) மேற்கொண்ட இந்தச் செயல், பொதுப் பாதுகாப்பு மற்றும் கடலோரக் காவல் படையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் பாரதூரமான குற்றம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“கடலில் தவிக்கும் உயிர்களைக் காப்பாற்றுவதை விட ஒரு கப்டனுக்கு வேறு எந்தப் பெரிய கடமையும் இருக்க முடியாது” எனத் தெரிவித்துள்ள நீதியரசர் கிறிஸ்டோபர் ரூதம், கடலோரக் காவல் படை அவரைப் பணிநீக்கம் செய்தது நியாயமானது என உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது 73 வயதுடையவராகவுள்ள கப்டன் கல்லகன், இத்தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
