லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுகின்றது
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
அதிகரிக்கப்பட்ட விலையின் அடிப்படையில் புதிய விற்பனை விலை
12.5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலன்: 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை: 3,990 ரூபாய் ஆகவும்
5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலன் 120 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை: 1,602 ரூபாய் ஆகவும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது
அதேநேரம் 2.3 கிலோ கிராம் எரிவாயு கொள்கலன் 56 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது அதன்படி புதிய விலை 750 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது
