Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்படும் விகிதம் அதிகரிப்பு

மார்ச் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

 

இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ நெருங்கியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் விசேட நிபுணர் மருத்துவர் துஷானி தாபரேரா மற்றும் சுகாதார அதிகாரிகள் முக்கிய தகவல்களை வழங்கியுள்ளனர்.

அதன்படி, 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 18,000 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த 2025ஆம் ஆண்டில் இந்த நோயினால் சுமார் 200 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகில் அதிகப்படியான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக மருத்துவர் துஷானி தாபரேரா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடுமையான காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, தசை வலி மற்றும் கண்கள் சிவப்படைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர் அல்லது மண், மனித உடலில் உள்ள காயங்கள், வெட்டுக்கள் அல்லது மெல்லிய சவ்வுகள் ஊடாக உடலுக்குள் செல்வதன் மூலம் இந்த பாக்டீரியா தொற்று ஏற்படுகின்றது.

இரத்தினபுரி, காலி, கேகாலை, களுத்துறை, மொனராகலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

குறிப்பாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அறிகுறிகள் தென்பட்டவுடன் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறும் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்

முந்தைய செய்தி லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு
அடுத்த செய்தி யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தத்திற்கு கடும் தட்டுப்பாடு – அவசர இரத்த தான கோரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

டெங்கு – சிக்கன்குன்யா பரவும் அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

ஏப்ரல் 20, 2025
இலங்கை

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவருக்கு 17 வயது 3 மாதங்கள்

பிப்ரவரி 11, 2026
இலங்கை

கடற்தொழில் அமைச்சர் பிரதேச செயலர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

டிசம்பர் 2, 2025
இலங்கை

சுதந்திர தினம் கரிநாள் – பேரணிக்கு வலுசேர்க்க அழைப்பு

பிப்ரவரி 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?