Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தத்திற்கு கடும் தட்டுப்பாடு – அவசர இரத்த தான கோரிக்கை

மார்ச் 11, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் , இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர்.

அது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எமது இரத்த வங்கியில் 330 பைந்த் குருதி இருக்க வேண்டும், ஆனால் தற்போது இருக்கும் குருதியின் அளவு 192 பைந்த் ஆகும். இது எமது இரத்த வங்கியைப் பொறுத்த வரையில் மிகவும் ஆபத்தான நிலையாகும், இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை விநியோகிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம்.

இரத்ததான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு குருதி சேகரிக்கப்பட்டாலும் நாளாந்தம் விநியோகிக்கப்படும் குருதியின் அளவு அதிகரித்து செல்கின்றது. இரத்த வங்கியில் நேரடியாக வந்து இரத்தம் கொடுக்கும் குருதிக்கொடையாளர்களுக்கும் தொலைபேசி வாயிலாக அழைப்புக்களை விடுத்தும் வருகின்ற கொடையாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படுகின்றது.

அத்துடன் ஏனைய இரத்த வங்கிகளிடமிருந்தும் தினமும் குருதியை பெற்றே நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்குகின்றோம். தற்போது அவர்களிடமும் குருதியின் இருப்பு குறைவடைந்துள்ளதினால் ஏனைய இரத்த வங்கிகளிடமிருந்தும் குருதியை பெற முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம். ஆகவே சனசமூக நிலையங்கள், விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்புகள், திணைக்களங்கள், பாடசாலைகள், பல்கலைக் கழக மாணவர் அமைப்புகள், ஏனைய கல்வி நிறுவனங்கள் தங்கள் தங்கள் இடங்களில் இரத்த தான முகாம்களை ஒழுங்கு செய்து எம்முடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் உங்கள் இடத்திற்கு வருகை தந்து குருதி சேகரிக்கும் பணியை நாம் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

அத்துடன் தனி நபர்கள் எமது இரத்த வங்கிக்கு நேரடியாக காலை 8.00 மணியிலிருந்து பி.ப 7.00 மணிவரை சமூகம் கொடுத்து இரத்த தானம் செய்வதன் மூலம் குருதி தட்டுப்பாட்டை ஓரளவு நிவர்த்தி செய்யலாம்.

ஆகவே இவ் இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு இளைஞர், யுவதிகள் இரத்த தானம் செய்வதற்கு முன்வந்து எமது உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு: 0212223063, 0772105375 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்படும் விகிதம் அதிகரிப்பு
அடுத்த செய்தி தாய்லாந்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது தாக்குதல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல்

ஏப்ரல் 20, 2026
இலங்கை

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்!

ஆகஸ்ட் 24, 2025
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்!

ஆகஸ்ட் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

1000 ஏக்கர் தனியார் காணிகள் இன்னும் ஆக்கிரமிப்பில்’ – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஆகஸ்ட் 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?