Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். அதீத போதையில் உயிரிழந்த இளைஞன்….

மே 19, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் அவசர இலக்கத்திற்கு (119) வந்த அழைப்பை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்ற வேளை, இளைஞன் உயிரிழந்த சம்பவத்தில், உயிரிழந்த இளைஞன் அதீத போதை காரணமாகவே உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

அந்நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் , மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொலிசாரின் 119 தொலைபேசி இலக்கத்திற்கு நபர் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை 01.30 மணியளவில் அழைப்பினை மேற்கொண்டு, அவசரமாக பொலிசாரின் உதவியை நாடுவதாக தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நடமாடும் (மொபைல்) சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழு , தொலைபேசி அழைப்பில் கூறப்பட்ட வீட்டின் முகவரியை கண்டறிந்து அங்கு விரைந்துள்ளனர்.

அங்கு பொலிஸார் சென்ற வேளை இளைஞன் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டமையை அடுத்து , நோயாளர் காவு வண்டிக்கு அறிவிக்கப்பட்டு , நோயாளர் காவு வண்டி மூலம் இளைஞனை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று, யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சில மணி நேரத்திலையே வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , இளைஞனின் பெற்றோர்கள் கடந்த 16ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள உறவினர் வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வுக்காக சென்றுள்ளனர்.

வீட்டில் உயிரிழந்த இளைஞனும் , இளைஞனின் சகோதரனுமே தங்கி இருந்துள்ளனர். அந்நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை சகோதரர்கள் இருவரும் தமது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து மது விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நள்ளிரவு நேரம் நண்பர்கள் சென்ற நிலையில் , சகோதரர்கள் இருவரும் வீட்டில் இருந்த வேளை , அதிகாலை உயிரிழந்த இளைஞனை காணவில்லை என சகோதரன் தேடியுள்ளார்.

அவ்வேளை வீட்டின் வெளி வளவில் தனது சகோதரன் சுயநினைவற்ற நிலையில் விழுந்து காணப்பட்டமையால் , பொலிசாரின் அவசர இலக்கத்திற்கு அழைப்பு எடுத்து பொலிசரின் உதவியை நாடியுள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

முந்தைய செய்தி யாழில்.தனியார் தங்குமிடத்தில் யுவதி குளிப்பதை காணொளி எடுத்தவர் கைது….
அடுத்த செய்தி தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழில் இடம்பெற்ற கர்நாடக இசை நிகழ்வு

ஆகஸ்ட் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் கைவிசேஷம் வழங்கல்….

ஏப்ரல் 14, 2025
இலங்கை

சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அரச அலுவலகங்களுக்கு புதன்கிழமை விடுமுறை இரத்து

ஏப்ரல் 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?