Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் பேராயர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்? 6 இலட்சம் டொலர் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல்

மார்ச் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Cardinal Gerald Cyprien Lacroix during the press conference today's meeting of the Synod.Rome, Italy, 23/10/2015/AGFEDITORIAL_193436/Credit:Pierpaolo Scavuzzo/AGF/SIPA/1510231946
SHARE

கியூபெக் பேராயர் கார்டினல் ஜெரால்ட் சிப்ரியன் லாக்ரோவா (Cardinal Gérald Cyprien Lacroix) 6 இலட்சம் டொலர் நஷ்டஈடு கோரி அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனக் கூறியே, அவர் இந்த வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த விவகாரம் கனடிய கத்தோலிக்கத் திருச்சபை வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கியூபெக் பேராயர் நிர்வாகத்திற்கு எதிராக சுமார் 150 பேர் இணைந்து தொடர்ந்துள்ள ஒரு கூட்டுப் பொதுநல வழக்கில் (Class-action lawsuit), பெண் ஒருவர் கார்டினல் லாக்ரோவா மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.

1980-களின் இறுதியில், தான் 17 வயது சிறுமியாக இருந்தபோது கார்டினல் லாக்ரோவா தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடக்கம் முதலே மறுத்து வரும் கார்டினல், இவை உள்நோக்கம் கொண்டவை என்றும், தனது நற்பெயருக்குப் பயங்கரமான களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து வத்திக்கான் (Vatican) ஏற்கனவே ஒரு உயர்மட்ட விசாரணையை நடத்தியது.

2024-ம் ஆண்டு அந்த விசாரணையின் முடிவில், கார்டினல் லாக்ரோவாவுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், அவர் மீதான விசாரணையைத் தொடர வேண்டிய அவசியமில்லை என்றும் போப்பாண்டவர் நிர்வாகம் அறிவித்திருந்தது.

தற்போது கார்டினல் லாக்ரோவா எடுத்துள்ள இந்தத் தற்காப்பு நடவடிக்கையானது, முறைப்பாட்டினை முன்வைத்த தரப்பினருக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கில் பிரெஞ்சு மொழிக்கு முன்னிலை – Bill 96 இன் கீழ் புதிய கடும் விதிகள்!
அடுத்த செய்தி பிரதமர் மார்க் கார்னியின் அவுஸ்திரேலிய பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

OC Transpo -வில் நிலவும் தொடர் குளறுபடிகளால் பயணிகளுக்கு கட்டணத்தைத் திரும்ப வழங்க கோரிக்கை

ஜனவரி 30, 2026
கியூபெக்

நூரன் ரெசாயி தொடர்பில் மொன்றியல் காவல்துறை அதிரடி சோதனை

பிப்ரவரி 27, 2026
கனடாமுதன்மை செய்தி

குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 10 பேர் கைது

செப்டம்பர் 14, 2025
கனடாமுதன்மை செய்தி

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ‘Fierté Montréal’ அமைப்பு

ஆகஸ்ட் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?