கியூபெக் மாகாணத்தின் இரத்த வங்கியான ‘ஹேமா-கியூபெக்’ (Héma-Québec) மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை ஒருங்கிணைப்பு அமைப்பான ‘டிரான்ஸ்பிளாண்ட் கியூபெக்’ (Transplant Québec) ஆகியவற்றை இணைக்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தை கியூபெக் அரசு அதிகாரப்பூர்வமாகக் கைவிட்டுள்ளது.
மாகாணத்தின் நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதற்காகவே, ‘மசோதா 7’-இன் (Bill 7) கீழ் இந்த இரண்டு அமைப்புகளையும் ஒன்றாக இணைக்க கியூபெக் அரசு திட்டமிட்டிருந்தது.
ஆனால், இந்த முடிவிற்கு மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பு வெளிப்பட்டது.
இந்நிலையில், “அனைவரையும் அமைதிப்படுத்தவும், தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கவும்” இந்த இணைப்புத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக திறைசேரியின் தலைவர் பிரான்சுவா-எலைன் டுரான்சோ அறிவித்துள்ளார்.
தற்போது இந்த இணைப்பு கைவிடப்பட்டாலும், இந்த இரண்டு அமைப்புகளும் தங்களுக்குள் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்று கியூபெக் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
