டொரண்டோ மாநகரத்தின் அடுத்த நிதிநிலை அறிக்கைக்கான பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதில், அந்த நகர நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
வரவிருக்கும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் வாழ்க்கைச் செலவு மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகிய இரண்டும் முக்கிய முன்னுரிமைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது டொரண்டோவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற சூழலால், மக்கள் நிதி நெருக்கடியை உணரும் நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் செயன்முறையில் பொதுமக்களின் பங்கேற்பு மிக முக்கியமானது என, டொரண்டோ மாநகரத்தின் மேயர் ஒலிவியா சௌ வலியுறுத்தினார்.
தற்போதைய காலகட்டத்தில் டொரண்டோ மக்கள் வேலைவாய்ப்பு மற்றும் செலவுகள் குறித்து, அதிகமாக கவலைப்படுவதாகவும் அவர், குறிப்பிட்டார்.
