Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சர்வதேச தகவல் தொழில்நுட்ப முயற்சியாண்மை மாநாட்டை நடாத்தவுள்ள வவுனியா பல்கலைக்கழகம்

பிப்ரவரி 19, 2026
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

வவுனியா பல்கலைக்கழகமானது ‘தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில் முனைவுத்திறனும் எதிர்கால மனிதகுலமும்’ என்ற கருப்பொருளின் கீழ் 32வது சர்வதேச தகவல் தொழில்நுட்ப முயற்சியாண்மை மாநாடொன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக வவுனியா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் (பேராசிரியர் அ. அற்புதராஜா கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா பல்கலைக்கழகத்தின் சார்பில் இம்மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் வவுனியா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 32வது சர்வதேச தகவல் தொழில்நுட்ப மற்றும் முயற்சியாண்மை மாநாடு (ITAM–32) இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் வவுனியா பல்கலைக்கழகம் இலங்கையில் விரைவாக வளர்ந்து வரும் ஒரு அரச பல்கலைக்கழகமாகும்.

இது கல்வி மேம்பாடு, ஆராய்ச்சி புதுமை மற்றும் பிராந்திய முன்னேற்றத்திற்கு பங்களிப்பினை வழங்குவதில் உறுதியாக செயற்பட்டு வருகின்றது.

வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம், உயர் கல்வி அணுகலை விரிவுபடுத்துதல், ஆராய்ச்சி பண்பாட்டை ஊக்குவித்தல் தொழில் துறையுடனும் சமூகத்துடனும் உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கல்வி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகள் மூலம், இப்பல்கலைக்கழகம் புதுமை, டிஜிட்டல் முன்னேற்றம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மையமாக தன்னை நிலைநிறுத்தி வருகிறது.

இந்த நோக்கத்தின் அடிப்படையில், சர்வதேச ITAM அமைப்பு, பல்கலைக்கழக தொழில் இணைப்பு (UBL) மற்றும் சர்வதேச விவகாரமையம் (CIA) ஆகியவற்றுடன் இணைந்து ITAM–32 மாநாட்டை வவுனியா பல்கலைக்கழகத்தில் நடாத்த முன்வந்துள்ளது.

(ITAM மாநாடு) உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட, நீண்டகாலமாக நிறுவப்பட்ட ஒரு கல்வி மேடையாகும். பல ஆண்டுகளாக இது பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், தொழில் முனைவோர், தொழில் துறை தலைவர்கள் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைத்துள்ளது.

(ITAM மாநாடு) பின்வரும் விடயங்களுக்கு ஒரு மேடையாக செயல்படுகிறது. முன்னோடியான ஆராய்ச்சிகளைப் பகிர்வு செய்தல், வளர்ந்துவரும் தொழில்நுட்பப் போக்குகளைப் பற்றி கலந்துரையாடல், சர்வதேச கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்தல், பல்கலைக்கழகம் மற்றும் தொழில் துறை நிலைத்த கூட்டாண்மைகளை உருவாக்கல்.போன்றவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

(ITAM–32) மாநாட்டை நடத்துவதன் மூலம், வவுனியா பல்கலைக்கழகம் உலகளாவிய கல்வித் திறனின் வலையமைப்பில் பெருமையுடன் இணைகிறது. அந்தவகையில் இந்த ஆண்டின் மாநாடானது தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில் முனைவுத்திறனும் எதிர்கால மனிதகுலமும் என்ற கருப்பொருளின் அடிப்படையில் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தலைப்பு இன்றைய வேகமாக மாறிவரும் உலக சூழலில் மிகவும் பொருத்தமானதாகும். செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மாற்றம், தானியங்கி முறைமை, மற்றும் புதுமை சார்ந்த பொருளாதாரங்கள் உலகத்தை மாற்றிவருகின்ற இன்றைய சூழலில் இந்த தலைப்பு பொருத்தமானதாகவே தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மாநாடு பின்வரும் முக்கிய கேள்விகளை ஆய்வு செய்ய முற்படுகின்றது. தொழில்நுட்பமானது தொழில் முனைவினை எவ்வாறு முன்னெடுக்க முடியும், புதிய கண்டுபிடிப்புகள் எவ்வாறு நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கு பங்களிக்க முடியும்.

தொழில்நுட்ப முன்னேற்றம் மனித மையப்படுத்தப்பட்டதாக இருப்பதை எவ்வாறு உறுதி செய்வது, எதிர்கால பொருளாதாரத்தை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்களின் பங்கு என்ன, உட்பட பல்வேறு விடயங்களை ஆய்வுசெய்கின்றது, இந்தத் தலைப்புக்கள் இலங்கையின் தேசிய முன்னுரிமைகளுடன் நெருங்கிய தொடர்புடையதாகும்.

இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இம் மாநாட்டில் பின்வரும் முக்கிய அம்சங்கள் இடம்பெறவுள்ளது. மாநாட்டுக்கு முந்தைய முக்கிய உரையினை ஆசியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் தேர்ச்சி பெற்ற சர்வதேச அறிஞர் குழாமின் பங்களிப்புடன் கலந்துரையாடலை மேற்கொள்ள இருக்கின்றனர்.

இதில் ஆசியாவின் பொருளாதார மாற்றம், டிஜிட்டல் முன்னணி நிலை மற்றும் உலகளாவிய பங்கு ஆகியவை ஆராயப்படும். அத்துடன் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வுக்கட்டுரை அமர்வுகள், மற்றும் கல்வி–தொழில் இணைப்பை வலுப்படுத்தும் கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளன.

செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு டிஜிட்டல் வணிகம் மற்றும் மின்னணு வாணிபம் தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில் முனைவு நிலையான முகாமைத்துவ நடைமுறைகள் புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் நுண்ணறிவு முறைமைகள் என்பன தொடர்பாகவும் கவனம் செலுத்து உள்ளது.

இம்மாநாட்டில் தென்கொரியா, இந்தியா, நேபாளம், சீனா ,ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து கணிசமான சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களின் பங்கேற்பு இலங்கையின் உலகளாவிய கல்வித் தெரிவு நிலையை மேம்படுத்தும் சர்வதேச கூட்டாண்மைகளை வலுப்படுத்தும்,ஆராய்ச்சி பரிமாற்றத்தை மேம்படுத்தும், பிராந்திய பொருளாதாரச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும், அறிவு பரிமாற்றத்திற்கும் புதுமைக்கும் பங்களிக்கும்.

முந்தைய செய்தி மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோர்க்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – ரமேஷ் கண்ணா
அடுத்த செய்தி மன்னாரில் டைனமோட் வெடி பொருளுடன் இரு மீனவர்கள் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இளம் பெண்களின் அரசியல் பங்கேற்புக்கு ஐக்கிய இராச்சியம் ஆதரவு!

செப்டம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நிலக்கரி மோசடி குறித்து அதிரடி விசாரணை

ஏப்ரல் 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை!

ஆகஸ்ட் 20, 2025
இலங்கை

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது!

செப்டம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?