Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கட்டைக்காடு பகுதியில் சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது

ஏப்ரல் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டக்காடு கடற்கரைப் பகுதியில் ஒளிக்கற்றைகளைப் (Light Course) பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு நபர்களை கைது செய்துள்ள வெற்றிலைக்கேணி கடற்படை அவர்கள் பயன்படுத்திய படகுகள், மற்றும் மின் உபகரணங்கள் உட்பட மீன்பிடி உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

நெற்றிரவு ஏப்ரல் 20 இரவு 10:40 மணியளவில், புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட டோரா தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த
நான்கு படகுகளில் சட்டவிரோத மின் ஒளி பாய்ச்சியும், மற்றும் மின்கலங்களைப் பயன்படுத்தியும் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், இன்று அதிகாலை 01:30 மணியளவில் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, இன்று காலை 10:30 மணியளவில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூன்று நபர்கள் கட்டைக்காடு முள்ளியான் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் ஆழியவளையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது

கைது செய்யப் பட்டவர்களிடமிருந்து 04 படகுகள் (Dinghies/FGD), வெளி இணைப்பு இயந்திரங்கள் (OBM), சுமார் 43 லிட்டர் மண்ணெண்ணெய், மின்கலங்கள் (Batteries), நீரில் மூழ்கிப் பயன்படுத்தக்கூடிய 11 மின்விளக்குகள், நங்கூரங்கள் மற்றும் 03 கைபேசிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில் யமஹா 40 HP மற்றும் சுசுகி 25HP ஆகிய இயந்திரங்களும் அடங்கும். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் சான்றுப் பொருட்களாக மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடல் வளத்தை அழிக்கும் இவ்வாறான சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி புதிய ‘கனடா – அமெரிக்க வர்த்தக ஆலோசனைக் குழு’ நியமிப்பு
அடுத்த செய்தி யாழில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி உள்ளிட்ட மூவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பலாலியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஜூன் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் உணவகத்திற்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம்

மே 8, 2026
அண்மைய செய்திகள்கனடா

வெள்ளைமாளிகையில் வைத்து அச்சுறுத்தப்பட்டனரா கனேடிய முதலமைச்சர்கள்..!!

பிப்ரவரி 13, 2025
இலங்கை

ஜனாதிபதியிடம் 20 கோரிக்கைளை சமர்ப்பித்துள்ள கஜேந்திரகுமார்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?