யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான மூன்று இளைஞர்களை கந்தகாடு மறுவாழ்வு நிலையத்தில் அனுமதிக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்து, அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்துவ அறிக்கையுடன், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
நீதிமன்ற விசாரணையை தொடர்ந்து மூன்று இளைஞர்களையும் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்புமாறு மன்று உத்தரவிட்டது.