நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் (Chrystia Freeland), கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலின் போது ‘கனடிய தேர்தல் சட்டத்தை’ மீறியுள்ளதாக, கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2024 ஜூன் மாதம், அரசு முறை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஃப்ரீலாண்ட், அங்கு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், லிபரல் கட்சி வேட்பாளர் லெஸ்லி சர்ச் (Leslie Church) என்பவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
ஒரு அமைச்சராக அரசுப் பணத்தில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வச் செய்தியாளர் சந்திப்பில், ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாகப் பேசுவது தேர்தல் சட்டப்படி “சட்டவிரோதப் பங்களிப்பு” (Unlawful Contribution) எனக் கருதப்படுகிறது.
ஃப்ரீலாண்ட் மீது தனிப்பட்ட முறையில் அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என்றாலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என அவர் தரப்பில் ‘உறுதிமொழி’ (Undertaking) அளிக்கப்பட்டுள்ளது.
