நாட்டில் பல்வேறு இடங்களில் குற்ற செயல்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் வத்தளை, கால சந்தி பகுதியில் தோட்டாக்கள் அடங்கிய பொதியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட அப்பொதியில் 04 ரி-56 ரகத் தோட்டாக்கள், 04 ரிவோல்வர் ரகத் தோட்டாக்கள், 02 பிஸ்டல் ரகத் தோட்டாக்கள், 11 வெவ்வேறு வகையான சிம் அட்டைகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
இப்பொதியை மறைத்து வைத்த விடயம் தொடர்பிலும் யக்கலமுல்ல, பொல்பாகொட பகுதியை சேர்ந்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் கல்நேவ, கல்தொட்ட மற்றும் எல்பிட்டி ஆகிய நீதிமன்றங்களினால் பிடியாணை மற்றும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
