இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 817 பேர் சிறைச்சாலையில் உள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகளும் அடங்குகின்றனர்.
2025ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கையின்படி, 2025ம் ஆண்டின் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்நாட்டுக் கைதிகளின் எண்ணிக்கை 811 ஆகும். இதில் 792 ஆண்களும் 19 பெண்களும் அடங்குகின்றனர்.
மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 311 பேர் தற்போது சிறையிலுள்ளனர். இவர்களில் 70 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
