வவுனியா பூந்தோட்டம் சந்தியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்று காலை குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இருவரை வேன் ஒன்றில் வந்த நபர்கள் வழிமறித்து வாளால் தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து இருவரும் மோட்டார்சைக்கிளை வீதியில் போட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதேவேளை குறித்த நபர்களை வாகனத்தில் வந்தவர்கள் கடத்திச்செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் மோட்டார்சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
