எம்மை பொலிஸார் கைது செய்தனர் என ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பியமை வேதனை அளிப்பதாக கிறிஸ்தவ மத தலைவர் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பசித்தோருக்கு உணவு அளிப்பதற்காக நிதி சேகரிக்க சென்ற சமயமே என்னுடன் சிலர் முரண்பட்டதை அடுத்து, நெல்லியடி பொலிஸார் எம்மை அழைத்து சென்று விசாரணைகளின் பின்னர் விடுவித்தனர். அதனை சிலர் தவறாக ஊடகங்கள் ஊடாக பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
நாம் இல்லாதோருக்கு இருப்போரிடம் இருந்து பெற்றுக்கொடுக்கும் சேவையே செய்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.